மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் - வி.கே.சசிகலா
|கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர்.
பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பித்துவிடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும், வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பித்துவிடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று அதில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.