< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை' - காயத்ரி ரகுராம்
|15 April 2023 8:52 AM IST
அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் எல்லாம் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விவகாரங்கள் தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் எல்லாமே மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் என நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் அதை ஜனவரி மாதமே அவர் வெளியிட்டிருப்பார். அவர் வெளியிட்ட தகவல்கள் எல்லாம் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த, கோர்ட்டில் விசாரணையில் உள்ள விவகாரங்கள் தான். தி.மு.க. ஊழல் பட்டியல் என்ற பெயரில் அவர் வெளியிடும் அறிக்கையில் எந்த பயனும் இல்லை."
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.