< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
8 July 2024 2:26 PM IST

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சேலம்,

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் நிர்வாகத்திறனற்ற ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடாது. திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையானவர்கள் அல்ல, அவர்கள் போலி குற்றவாளி. எந்தெந்த துறையில் கொள்ளையடிக்கலாம் என்பதுதான் இந்த ஆட்சியின் திட்டம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். எனவே அவரை பற்றி பேச ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்