< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில செய்திகள்

'தமிழ்நாட்டில் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை' - அமைச்சர் அன்பில் மகேஷ்

தினத்தந்தி
|
17 Oct 2023 7:36 PM IST

தமிழ்நாட்டில் எந்த தேர்விலும் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"வடமாநிலங்களில் போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதனால் தமிழே தெரியாவிட்டாலும் கூட இந்திக்காரர்கள் இங்கு வந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு நடைபெறும் எந்த தேர்விலும் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை. பள்ளி தேர்வுகள், கல்லூரி தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் சரியாகவும், முறையாகவும் நடத்தி வருகிறோம்."

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்