< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழையால் பெரிய பாதிப்புகள் கிடையாது: மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

சென்னையில் மழையால் பெரிய பாதிப்புகள் கிடையாது: மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
12 Aug 2024 6:57 PM IST

சென்னையில் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னை பெருங்குடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் தொடக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

"சென்னை மாநகர வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2ஆயிரம் கோடி அளவுக்கான திட்டங்களை ஒரே நாளில் தொடங்கி வைத்தது என்பது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்றைக்கு மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கான திட்டங்களை இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

மழை வந்தவுடனே பெரிய அளவிலான பாதிப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்து வந்தோம். தற்போது சென்னையில் 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பொழிந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்புகள் சென்னையில் இப்போது இல்லை என்கின்ற நிலையை உருவாக்கி இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்றார்.

மேலும் செய்திகள்