< Back
மாநில செய்திகள்
பொதுசிவில் சட்ட மசோதா வெளியாகும் முன் தவறு என்பதில் நியாயம் இல்லை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பொதுசிவில் சட்ட மசோதா வெளியாகும் முன் தவறு என்பதில் நியாயம் இல்லை

தினத்தந்தி
|
16 July 2023 8:38 PM GMT

பொதுசிவில் சட்ட மசோதா வெளியாகும் முன்பு தவறு என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என தஞ்சையில், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


பொதுசிவில் சட்ட மசோதா வெளியாகும் முன்பு தவறு என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என தஞ்சையில், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

காமராஜர் பிறந்த நாள் விழா

தஞ்சை அருகே உள்ள இனாத்துக்கான்பட்டியில் பா. ஜனதா கட்சி பொருளாதார பிரிவு சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தல், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், 9-ம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் மதிமாறன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விவேக்சாரதி வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பெதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கியும் பேசினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பின்னர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு தலைவரைப் பற்றி கூறும்போது, அந்த தலைவர் வாழ்ந்த வாழ்க்கையை நான் கடைபிடிக்கிறேனா என்பதுதான் முக்கியம். சிலை வைப்பதோ, கொண்டாடுவதோ, பெரிய விஷயமே கிடையாது. காமராஜர் வழங்கிய இலவச கல்வி, சீருடை போன்ற திட்டங்களை இனத்துகான்பட்டி கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். பொது சிவில் சட்ட மசோதா வெளியாவதற்கு முன்பு தவறு என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

தமிழகத்தில் கடந்த 1967 ஆண்டுக்கு பின்னர் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது. தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியினரே அவர்களின் தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி. போன்றவர்கள் தங்களுக்கு இந்த பதவி வேண்டும் என கேட்காமல் தங்கள் வாழ்வை நாட்டுக்கு அர்ப்பணித்து சென்றார்கள்.

இலவச கல்வி மூடப்படுகிறது

தி.மு.க. மக்களுக்கு நன்மையான ஏதாவது ஒரு திட்டத்தை வேண்டும் என்று கூறியுள்ளதா?, நீட் தேர்வு வேண்டாம் என தி.மு.க.வினர் கூறினர்.

தற்போது நீட் தேர்வு காரணமாக சாதாரணமாக குடிசையில் வாழக்கூடியவர்களின் குழந்தைகள், மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் வாங்குகின்றனர். நீட் தேர்வு வராவிட்டால், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்திருக்குமா. மாணவர்களை செம்மைப்படுத்தி, திறன் மிக்கவராக மாற்றக்கூடியது தான் அரசின் கடமை.

16ஆயிரம் பள்ளிகள் இருந்த நிலையில் அதை 32 ஆயிரம் பள்ளிகளாக மாற்றியவர் காமராஜர். 100-க்கு 7 மாணவர்கள் படித்த நிலையில் அதை 37 மாணவர்களாக மாற்றியவர் காமராஜர். ஆனால் இன்று ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மூடப்படுகிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது என்று அர்த்தம்.

உறுதிப்படுத்த வேண்டும்

காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக முதல்-அமைச்சரை உடனடியாக அழைத்துக் கொண்டு, பெங்களூருவுக்கு சென்று மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை உறுதிபடுத்தி வி்ட்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்