< Back
மாநில செய்திகள்
பெரியார் சிலையில் கடவுள் இல்லை வாசகம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மாநில செய்திகள்

பெரியார் சிலையில் "கடவுள் இல்லை" வாசகம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தினத்தந்தி
|
12 Sept 2022 2:26 PM IST

தமிழகத்தில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம். தெய்வநாயகம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, பெரியார் சிலைகளில் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



மேலும் செய்திகள்