"சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை; எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை" - எஸ்.பி.வேலுமணி
|சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை; எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னை,
சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை நிலைநாட்டவில்லை. தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்தும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை. அதிமுக ஆட்சியில் பொது கணக்கு குழு தலைவர் பதவியை பெருந்தன்மையாக துரைமுருகனுக்கு வழங்கினோம்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித்தலைவர் பேரவையில் பேசுவதை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எதிரொலிக்கும்." என்று கூறினார்.
#BREAKING || "சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை"
— Thanthi TV (@ThanthiTV) April 21, 2023
"எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை"- எஸ்.பி.வேலுமணி#TNAssembly2023 | #spvelumani | #appavu | #ADMK pic.twitter.com/erNb9UgZZi