< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜி அமைச்சராக எந்தவித தடையும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி அமைச்சராக எந்தவித தடையும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி

தினத்தந்தி
|
26 Sept 2024 7:30 PM IST

செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பேசியதாவது;

"செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை. எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார். பாஜக எதிர்க்கட்சிகள் மீது இதுபோன்று பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விடுத்து திருந்த வேண்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு கேடுகாலம் தான். செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதலமைச்சர் எடுப்பார் அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்"

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்