< Back
மாநில செய்திகள்
விடுமுறை, முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

விடுமுறை, முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
30 Jun 2023 4:43 PM IST

விடுமுறை, முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கோவிலில் விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் நேற்று அரசு விடுமுறை, முருகப்பெருமானுக்கு உகந்த விசாக தினம் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் காலை முதலே மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. எனவே கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கோவிலுக்கு பஸ், கார்கள் மூலம் வந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் போக்குவத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். வாகனங்கள் மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நெரிசலில் சிக்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்