< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தமிழகத்தில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்தும் திட்டமில்லை' - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
|16 Aug 2023 11:33 PM IST
தமிழகத்தில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களிடம் பேசி தமிழை வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.