சென்னை
திருவொற்றியூர் அருகே மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
|திருவொற்றியூர் அருகே மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ெரயில் இயங்கி வருகிறது. நேற்று திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை மெட்ரோ ெரயில் நிலைய தூணில் வெளிப்புற சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து சாலையில் விழுந்தது.
நல்ல வேளையாக அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் எப்போது வேண்டுமானாலும் அந்த இடத்தில் இருந்து மேலும் சிமெண்டு மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து விடுமோ? என அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், மெட்ரோ ெரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்களுடன் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த சிமெண்டு பூச்சுகளை அப்புறப்படுத்தினர். பின்னர் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த மெட்ரோ ரெயில் தூணிலும் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.