< Back
மாநில செய்திகள்
பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி சிக்கியதால் பரபரப்பு
மதுரை
மாநில செய்திகள்

பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி சிக்கியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
1 Jan 2023 1:44 AM IST

மதுரையில் பிரபல ரவுடி வீட்டில் துப்பாக்கி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை திலகர்திடல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 54). இட்லிக்கடை நடத்தி வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், இவரது வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்து பார்த்தபோது, இது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பிரபல ரவுடியான அலெக்ஸ், தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் குழுவை சேர்ந்தவர் ஆவார். அவரது வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோர்ட்டில் அனுமதி பெற்று, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்