எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது - சீமான் பேச்சு
|தமிழ்நாடு மின்வாரிய கேங் மேன் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, அண்ணா சாலையில் நடந்த மின் வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் 3வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 300 மாணவிகள் படிக்கும் இடத்தில் 2 கழிவறைகள்தான் உள்ளன. ஆனால், பல நூறு கோடியில் சமாதி கட்டப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம் நடத்தப்படுகிறது. எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக் கூட இல்லை. பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. கேள்வி கேட்டால் ஆன்டி இந்தியன் என்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.