< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
|24 Nov 2022 9:44 PM IST
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்ட் திடீரென அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லிப்ட் திடீரென அறுந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று மாலை 6 மணி அளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் இருந்த லிப்ட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், டாக்டர், செவிலியர் உள்ளிட்ட 12 பேர் வந்துள்ளனர்.
லிப்ட் தரைத்தளத்திலிருந்து 2-வது தளத்திற்கு சென்றபோது திடீரென லிப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் லிப்ட் பாதியிலேயே நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் லிப்டின் கதவை உடைத்து உள்ளிருந்தவர்களை காப்பாற்றினர்.