< Back
மாநில செய்திகள்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு நேற்று புடலங்காய் வரத்து அதிகாித்துள்ளது. ஒரு கட்டு புடலங்காய் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்
மாநில செய்திகள்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு நேற்று புடலங்காய் வரத்து அதிகாித்துள்ளது. ஒரு கட்டு புடலங்காய் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி
|
18 May 2023 10:19 AM GMT

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு நேற்று புடலங்காய் வரத்து அதிகாித்துள்ளது. ஒரு கட்டு புடலங்காய் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு நேற்று புடலங்காய் வரத்து அதிகாித்துள்ளது. ஒரு கட்டு புடலங்காய் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை ரூ.3 குறைவுதிருப்பூர் தென்னம்பாளையம் மாா்க்கெட்டுக்கு சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று புடலங்காய் விற்பனைக்கு குவிந்தது. காய்கறிகள் விலை நிலவரம்திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-13 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், 18 கிலோ எடை கொண்ட வெண்டைக்காய் மூட்டை ரூ.300-க்கும், 20 கிலோ எடை கொண்ட அவரைக்காய் மூட்டை ரூ.1200-க்கும், 18 கிலோ எடை கொண்ட மிளகாய் மூட்டை ரூ.500-க்கும், 20 கிலோ எடை கொண்ட கத்தரிக்காய் மூட்டை ரூ.500-க்கும், 15 கிேலா எடை கொண்ட பீர்க்கங்காய் கட்டு ரூ.300-க்கும், 17 கிலோ எடை கொண்ட கொத்தவரைக்காய் ரூ.350-க்கும், 15 பூ அளவிலான காளிபிளவர் மூட்டை ரூ.400-க்கும், 12 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை ரூ.200-க்கும், 28 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்