< Back
மாநில செய்திகள்
போதிய பேருந்துகள் இல்லை... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த பயணிகள்.!
மாநில செய்திகள்

போதிய பேருந்துகள் இல்லை... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த பயணிகள்.!

தினத்தந்தி
|
30 April 2023 9:07 AM IST

பேருந்துக்காக பலமணிநேரம் காத்திருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

சென்னை,

தொடர் விடுமுறை மற்றும் கோடை விடுமுறையின் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால், பேருந்துகள் போதிய அளவில் இயக்கவில்லை என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், பேருந்துக்காக பயணிகள் பலமணிநேரம் காத்திருக்கும் சூழல் நிலவியதாக பயணிகள் தெரிவித்தனர். குறிப்பாக பெரம்பலூர், பன்ருட்டி, கடலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துவசதி இல்லாததால், பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

இதனால் கடுப்பான பயணிகள், அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனை அடுத்து பயணிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு போக்குவரத்து ஓரளவு சரிசெய்யப்பட்டது.

மேலும் செய்திகள்