சனாதனத்தை விட முக்கிய பிரச்சினைகள் உள்ளன- பா.ம.க. தலைவர் அன்புமணி
|காவிரியில் இருந்து உரிய நீரை பெற கர்நாடக முதல் மந்திரியை தமிழக முதல் அமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும்.
சென்னை,
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இது நாடு முழுவது பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது;
சனாதனத்தை விட முக்கிய பிரச்சினைகள் உள்ளன. காவிரியில் உரிய நீரை பெற கர்நாடக முதல் மந்திரியை தமிழக முதல் அமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு கூடுதல் விலை வழங்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் குளிர்ப்பதன கிடங்கு இல்லாததால் தக்காளி விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. மேட்டூர் அணையை ஆழப்படுத்தினால் கூடுதலாக 20 டிஎம்சி நீரை தேக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நெய்வேலி எம்.எல்.ஏ ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம் என கூறியது குறிப்பிடதக்கது.