< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் பல பேய்கள் உள்ளன; அதை விரட்டத்தான் இந்த வேதாளம்: அண்ணாமலை
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல பேய்கள் உள்ளன; அதை விரட்டத்தான் இந்த வேதாளம்: அண்ணாமலை

தினத்தந்தி
|
11 July 2024 2:22 PM IST

தமிழகத்தில் பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை விரட்டத்தான் வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவிற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தை போர் ஓய்ந்த பாடில்லை. இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், " அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது" என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை விரட்டத்தான் வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்களை பிடித்த பீடைகள் போல பல பேய்கள் உள்ளன. அந்த பேய்களை விரட்டத்தான் வேதாளம் ஆகிய நான் வந்துள்ளேன். ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன். ஒரே நேரத்தில் எல்லா பேய்களையும் ஓட்ட முடியாது. செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என நான் கூறியது உண்மை தான். அவர் மீது நான் வைத்துள்ள விமர்சனத்திற்கான தரவுகளை வெளியிட்டிருக்கிறேன். செல்வப்பெருந்தகை பற்றி நான் சொன்னது உண்மை என காங்கிரசை சேர்ந்த மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் என்னிடம் தொலைபேசியில் அழைத்து கூறுகின்றனர். புதிதாக வந்துள்ள தொண்டர்கள் ஊருக்கு 4 பேர் என் உருவ பொம்மையை எரிக்கின்றனர். அதனால் மகிழ்ச்சிதான்" என்றார்.

மேலும் செய்திகள்