< Back
மாநில செய்திகள்
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
கடலூர்
மாநில செய்திகள்

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

தினத்தந்தி
|
15 July 2022 4:55 PM GMT

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் கடந்த 30-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 2-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பல்வேறு வாகனத்தில் சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 10-ந்தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி நடனபாதேஸ்வரர், அஸ்தலாம்பிக்கைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.பின்னர் இரவில், அங்குள்ள குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்