< Back
மாநில செய்திகள்
பூவராகசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
கடலூர்
மாநில செய்திகள்

பூவராகசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

தினத்தந்தி
|
7 May 2023 12:15 AM IST

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் தேரோட்டம், சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மட்டையடி உற்சவமும், நித்திய புஷ்கரணையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் தெப்ப குளத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. இதில் தெப்பம் நீராழி மண்டபத்தை 3 முறை சுற்றி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தின் படிக்கட்டுகளில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தெப்பக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளியதும், அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை சாமி விதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்