புதுக்கோட்டை
காமாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம்
|கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காமாட்சி அம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் 9-ம் நாள் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்த 10-ம் நாள் விழா தெப்ப உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தெப்ப உற்சவம்
இதையடுத்து கோவில் அருகில் உள்ள குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து மேள தாளம், வாணவேடிக்கை முழங்க காமாட்சி அம்மன் தெப்பத்தில் குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்பத்தில் இருந்து இறங்கி பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைெதாடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.