< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்பு
|15 Oct 2023 12:15 AM IST
தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பதவி ஏற்று கொண்டார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய டாக்டர் மீனாட்சி சுந்தரம் லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவ படிப்பில் துறை தலைவராக பணியாற்றிய டாக்டர் திருநாவுக்கரசு தற்காலிக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2 மாதங்களாக அவர் பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவத் துறையின் இயக்குனராக பணியாற்றி வரும் டாக்டர் பாலசங்கரை புதிய முதல்வராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் பாலசங்கர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.