தேனி
தேனி அரசு மருத்துவமனையில்கொரோனா ெதாற்று தடுப்பு ஒத்திகை
|தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் நோய் தடுப்பு ஒத்திகை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ெதாற்று தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்்டர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டார்.
இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல், தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிப்பது, நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில் வருபவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தேவையான மருத்துவ வசதிகள் செய்வது உள்ளிட்ட ஒத்திகையை மருத்துவர்கள், நர்சுகள் நடத்தி காட்டினர்.
மேலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.