< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
|17 April 2024 9:49 PM IST
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமானது.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், லட்சுமிபுரம் என்ற இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீயால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமாகியுள்ளது.
இதில் பல அரிய வகை மூலிகைகளும், மரங்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. இதனிடையே வனத்துறை தீ தடுப்பு காவலர்கள் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.