< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தேனி: பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு
|13 Aug 2024 9:04 AM IST
நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வராக ஆற்றங்கரையோரம் வசிக்கும் வடுகபட்டி, நெல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி பகுதி மக்கள், ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.