தேனி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் முகாம்; 5-ந்தேதி நடக்கிறது
|தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்கள், தாட்கோ மூலம் கடனுதவி போன்றவை வழங்கப்படுகிறது.
இத்திட்டங்களில் பயன்பெறும் வகையில் வருகிற 5-ந்தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக்கடன் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் வங்கிக்கடன் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேரில் வந்து விண்ணப்பிக்க முடியாத நபர்கள் பாதுகாவலர்கள் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.