< Back
மாநில செய்திகள்
தேனி கலெக்டர் அலுவலகத்தில்  நிலப்பிரச்சினையில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
தேனி
மாநில செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினையில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
21 July 2022 7:00 PM IST

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நிலப்பிரச்சினையில் மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மனைவி ராமலட்சுமி (வயது 65). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, "சில்வார்பட்டியில் உள்ள எனது பூர்வீக இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டுகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தீக்குளிக்க முயன்றேன்" என்றார். இதற்கிடையே மண்எண்ணெய் ஊற்றியதால் அவருக்கு உடலில் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்