< Back
மாநில செய்திகள்
தேனி கலெக்டர் அலுவலகத்தில்பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
தேனி
மாநில செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில்பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயற்சி

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயன்றனர்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு போடி மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த வைகை மகளிர் நலச்சங்கம், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் பெண்கள் சிலர் வந்தனர். அவர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், 'எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இப்போதும் மனு கொடுக்க வந்தோம்' என்றனர். பின்னர் அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்