< Back
மாநில செய்திகள்
தேனி அல்லிநகரம்நகராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:கலெக்டரிடம் பா.ஜ.க. கவுன்சிலர் மனு
தேனி
மாநில செய்திகள்

தேனி அல்லிநகரம்நகராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:கலெக்டரிடம் பா.ஜ.க. கவுன்சிலர் மனு

தினத்தந்தி
|
21 May 2023 12:15 AM IST

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம், பா.ஜ.க. கவுன்சிலர் மனு கொடுத்தார்.

தேனி அல்லிநகரம் நகராட்சி 13-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் ஆனந்தி விஜயகுமார், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் தேனி நகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்று 15 மாதங்களான நிலையில் இதுவரை 7 முறை மட்டுமே சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 20-ந் தேதியில் இருந்து தற்போது வரை 3 மாதங்களாக கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகள் அனைத்தும் முடங்கி கிடக்கின்றன.

குடிநீர் வினியோகம் செய்யும் பணி, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க கடந்த 30-தேதி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் நகராட்சி கூட்டத்தை கூட்டாத காரணத்தினால் மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களுக்கான பிரச்சினைகளை நகராட்சிக்கு எடுத்துரைக்க கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் முடங்கி கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகத்தை திறம்பட செய்யத் தவறிய நகராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்து அத்தியாவசிய பணிகளை மக்கள் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்