< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீஞ்சூரில் தொடர் திருட்டு சம்பவங்கள்; வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
|26 Feb 2023 5:21 PM IST
வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அரிசி ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலத்தவர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து நேற்று நள்ளிரவு அப்பகுதி மக்கள் சேர்ந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அரிசி ஆலையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வடமாநில தொழிலாளர்களை கண்காணிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.