கன்னியாகுமரி
தொழிலாளர்களின் செல்போன்கள், பணம் திருட்டு
|கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் செல்போன்கள், பணம் திருட்டு போனது.
அருமனை:
கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் செல்போன்கள், பணம் திருட்டு போனது.
அருமனை நங்ககோயிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது வீட்டில் கட்டிட சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சம்பவத்தன்று 3 கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்கள் தரைத்தளத்தில் தங்களது செல்போன் மற்றும் ரூ.2,500 ரொக்கத்தையும் வைத்து விட்டு வெளிப்புறத்தில் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 'ஹெல்மெட்' அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வீட்டின் உள்ளே புகுந்து தரை தளத்தில் வைத்து இருந்த 3 செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்று விட்டார்.
இதுகுறித்து தொழிலாளர்கள் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்ம நபர் செல்போன்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.