< Back
மாநில செய்திகள்
கோவில் உண்டியல் திருட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கோவில் உண்டியல் திருட்டு

தினத்தந்தி
|
17 Dec 2022 10:03 PM IST

வேடசந்தூர் அருகே கோவில் உண்டியல் திருடப்பட்டது.

வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பிரிவில் கருப்பணசாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலை பராமரிப்பாளர் பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை அவர் கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது உள்ளே இருந்த உண்டியலை காணவில்லை. இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில் கதவின் பூட்ைட உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்