< Back
மாநில செய்திகள்
பூதப்பாண்டி அருகே ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பூதப்பாண்டி அருகே ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருட்டு

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

பூதப்பாண்டி அருகே ஓட்டலில் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது,

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் இறச்சகுளம் பஸ் நிலையம் அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில், முருகன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு ஓட்டலை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று அதிகாலை ஓட்டலை திறக்க வந்தபோது ஓட்டலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் இருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும் திருட வந்த மர்ம நபர் கடையில் இருந்த 4 கோழி முட்டைகளையும் உடைத்து குடித்து இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து முருகன் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

--------------

மேலும் செய்திகள்