< Back
மாநில செய்திகள்
ரூ.30 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ரூ.30 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு

தினத்தந்தி
|
10 Oct 2023 3:01 AM IST

கல்லணையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

கல்லணையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுக்கடை

தஞ்சை மாவட்டம் கல்லணையில் உள்ள கல்லணைக்கால்வாய் கரையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு ஊழியர்கள் பணி முடிந்த உடன் கடையை பூட்டி சென்று விட்டனர். இ்ந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர்.நேற்று கடையை திறக்க ஊழியர்கள் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு தோகூர் போலீஸ் நிலையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

விசாரணை

இதன்பேரில் தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் ஐயாபிள்ளை ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கலால் துறை அதிகாரிகள் கடைக்கு வந்து கடையில் திருடப்பட்ட மது பாட்டில்கள் குறித்து ஆய்வு செய்தனர். இது குறித்து தோகூர் போலீசார் விசாரணை நடத்தி மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்