< Back
மாநில செய்திகள்
மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு

தினத்தந்தி
|
4 Aug 2023 1:35 AM IST

தஞ்சையில் மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு போனது.

தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மனைவி பிரதீபா (வயது 35). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மளிகைக் கடையில் இவரது மகன் கார்த்திக் இருந்துள்ளார். வியாபாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அங்கு அதே பகுதியில் காவலாளியாக வேலை பார்க்கும் சுப்பிரமணியன் (64) என்பவர் வந்து கார்த்திக்கின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.30 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். பின்னர் கார்த்திக் கல்லாப்பெட்டியை பார்த்தபோது பணம் காணாமல் போது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது சுப்பிரமணியன் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து பிரதீபா தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்