< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் திருட்டு

தினத்தந்தி
|
2 May 2023 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய மனைவி ரஞ்சிதா(வயது 26). வினோத் குமார் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ரஞ்சிதா தனது வீட்டை பூட்டிக் கொண்டு சம்பவத்தன்று புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில் ரஞ்சிதாவின் தந்தை மகாலிங்கம் தனது மகள் வீட்டிற்கு சென்று பார்த்து வரலாம் என சென்றார். அப்போது ரஞ்சிதா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

நகை-பணம் திருட்டு

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ரஞ்சிதாவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் அலமாரியில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபா்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்