< Back
மாநில செய்திகள்
தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
2 Oct 2023 12:45 AM IST

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 லட்சம் திருடு போனது.

கோவை பீளமேடு அருகே காளப்பட்டி சிவசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் அஜீஸ்கான் (வயது 34). தொழிலதிபரான இவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்தநிலையில் வீட்டில் தற்போது டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கலிம்(24), ஆரிப் (25) ஆகிய இருவர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அஜிஸ்கான் வீடு கட்டும் இடத்தில், தனது கை பையில் ரூ.2 லட்சம் வைத்துவிட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, பணத்தையும் காணவில்லை. வீட்டில் வேலை செய்த அந்த இருவரையும் காணவில்லை. அதனால் ரூ.2 லட்சத்தை கலிம், ஆரிப் ஆகிய 2 பேரும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அஜீஸ்கான் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற கலிம், ஆரிப் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்