< Back
மாநில செய்திகள்
கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் திருட்டு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
4 July 2022 8:11 PM IST

கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் திருட்டு

செங்கம் தாலுகா கல்லரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி.

இவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளேன். கடந்த 23-ந் தேதி மாலை எனது செல்போனுக்கு வங்கியில் இருந்த அதிகாரி பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு தேதி முடிவடையும் நிலையில் உள்ளது.

புதிதாக கார்டு பெற வேண்டும். அதற்கு உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள குறியீடு எண்ணை கொடுக்குமாறு கேட்டார். நானும் அந்த எண்ணை அவருக்கு கொடுத்தேன். அதன்பிறகு செல்போனுக்கு தகவல் வரும். அந்த எண்ணை கூறுமாறு சொன்னார்.

அவர் கூறியவாறே அந்த எண்ணை அவரிடம் கூறினேன். அப்போது எனது வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் தொகை இருப்பு இருந்தது.

நேற்று நடமாடும் ஏ.டி.எம். வங்கி அலுவலரிடம் பணம் எடுக்க முயன்றபோது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றார்.

இதுகுறித்து இன்று தேவனாம்பட்டில் உள்ள வங்கிக்கு சென்று கூறியபோது, எனது வங்கிக்கணக்கு ஸ்டேட்மெண்டடை என்னிடம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க கிளை மேலாளர் கூறினார்.

எனவே புகார் மனுவினை பரிசீலித்து எழுத படிக்க தெரியாத என்னை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்