செங்கல்பட்டு
செங்கல்பட்டு செய்யூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
|செங்கல்பட்டு செய்யூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
செங்கல்பட்டு செய்யூர் அடுத்த பெரியவெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு (வயது 60). விவசாயி. நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள இவரது உறவினரை பார்ப்பதற்காக, வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை சென்றார்.பின்னர் அவர் அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருட்டு குறித்து அப்பாவு செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.