< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மடிக்கணினி, செல்போன் திருட்டு
|12 Oct 2023 3:19 AM IST
தஞ்சை அருகே கல்லூரி மாணவரிடம் மடிக்கணினி, செல்போனை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வல்லம்;
திருச்சி எஸ்.என்.இ.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது ஷெரிப் . இவருடைய மகன் முகமதுபாசில்(வயது20). இவர் தஞ்சை திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இந்நிலையில் முகமதுபாசில் அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் போலீசில் முகமது பாசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.