கன்னியாகுமரி
களியக்காவிளை அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
|களியக்காவிளை அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் குஞ்சசேரி பகுதியை சேர்ந்தவர் ரெகுவரன் நாயர் (வயது67), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய ஒரு மகன் கொடைக்கானில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெகுவரன் நாயர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் கொடைக்கானலில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு ஊரில் உள்ள வீட்டுக்கு திரும்ப வந்தார்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே ெசன்ற போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
பணம், நகை திருட்டு
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ரெகுவரன் நாயர் படுக்கை அறையில் ெசன்று பார்த்தார். அங்கு வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 கிராம் தங்க மோதிரம், ரூ.22 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து பணம், நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.