< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
|27 May 2023 2:30 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சந்து தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள கோவிலில் நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியை காண்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை திருட்டுபோனது தெரிய வந்தது.
இது குறித்து லட்சுமி மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.