< Back
மாநில செய்திகள்
2 வீடுகளில் நகை- பணம் திருட்டு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

2 வீடுகளில் நகை- பணம் திருட்டு

தினத்தந்தி
|
1 Oct 2023 1:57 AM IST

நெல்லை அருகே 2 வீடுகளில் நகை- பணம் திருடப்பட்டது.

நெல்லை அருகே வடக்கூர் கீழநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 56). ஜவுளிக்கடை ஊழியர். இவரின் மனைவி ரேவதி. நேற்று காலையில் இவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் அந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து அங்கு மரபீரோவில் இருந்த 10 கிராம் தங்க மோதிரங்கள் 4 மற்றும் ரூ.1500-ஐ மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

அதேபோல் அருகில் உள்ள பாலமுருகனின் உறவினர் வேலு என்பவர் வீட்டிலும் 4 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி கம்மலை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் செய்திகள்