செங்கல்பட்டு
கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
|கல்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
வீட்டின் பூட்டு உடைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் நலம் நகர் பகுதியில் வசித்து வருபவர் விக்டர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு செய்யூர் அருகே பவுஞ்சூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை-பணம் திருட்டு
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் ரொக்க பணம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதமாக கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.