< Back
மாநில செய்திகள்
வாகன தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள் திருட்டு: இலங்கை வாலிபர்கள் 3 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வாகன தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள் திருட்டு: இலங்கை வாலிபர்கள் 3 பேர் கைது

தினத்தந்தி
|
27 Sept 2022 2:52 PM IST

கும்மிடிப்பூண்டியில் வாகன தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை திருடிய இலங்கை வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான வாகன கட்டுமான தொழிற்சாலை பல வருடங்களாக மூடிக்கிடக்கிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 23-ந் தேதி சுமார் 100 கிலோ எடை கொண்ட இரும்பு குழாய்கள் திருட்டு போனது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மூடப்பட்ட தொழிற்சாலையில் இரும்பு குழாய்கள் திருடிய வழக்கில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தர்மராஜ் (வயது 32), பிரதீப் (28), ராஜ்குமார் (36) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்