< Back
மாநில செய்திகள்
இரும்பு கம்பிகள் திருட்டு
கரூர்
மாநில செய்திகள்

இரும்பு கம்பிகள் திருட்டு

தினத்தந்தி
|
25 Sept 2023 11:09 PM IST

இரும்பு கம்பிகள் திருட்டப்பட்டுள்ளது.

கரூர் வெங்கமேடு காமதேனு நகர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கான இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அங்கிருந்த 23 கிலோ இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் பொறியாளர் ஜோதி பிரசன்னா (வயது 31) என்பவர் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்