< Back
மாநில செய்திகள்
லாரியில் டீசல் திருட்டு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

லாரியில் டீசல் திருட்டு

தினத்தந்தி
|
29 Sept 2023 5:15 AM IST

சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரியில் டீசல் திருடப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஏழுர்பட்டிைய சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர், குஜராத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரை கப்பலூருக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை இறக்கிவிட்டு, சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் பொருட்களை ஏற்றிச்செல்வதற்காக வந்தார். இரவு நேரமாகி விட்டதால், கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு அவர் தூங்கி விட்டார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, லாரி டேங்கில் இருந்த 250 லிட்டர் டீசல் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், லாரியில் இருந்த டீசலை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்