< Back
மாநில செய்திகள்
சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

தினத்தந்தி
|
25 Oct 2023 1:15 AM IST

சூளகிரி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சூளகிரி

சூளகிரி அருகே பீரே பாளையம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள், டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் இந்த திருட்டு குறித்து சூளகிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்