< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
வாகைவிளையில் செல்போன் டவர் பேட்டரி திருட்டு
|30 Sept 2023 12:15 AM IST
வாகைவிளையில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடப்பட்டது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வாகைவிளையில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இதனை ஆத்தூர் கொலுவைநல்லூர் பரதர் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் மின்சார ரீடிங்கை கணக்கெடுக்க வந்தபோது, கதவை உடைத்து பேட்டரியை மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.